293 பெண்பாற்பெயர் விகுதிகள் அச்சி | ...பறைச்சி | தி | ...குறத்தி, ஒருத்தி | ஆட்டி | ...வெள்ளாட்டி, கம்மாட்டி | ஆள் | ....நல்லாள், தீயாள் | அனி | ...பார்ப்பனி | அள் | ...நல்லள், தீயள் | ஆத்தி | ...வண்ணாத்தி | இ | ...சாத்தி, கொற்றி | அத்தி | ...நட்டுவத்தி, | இச்சி | ...கள்ளிச்சி | | கைக்குளத்தி | சி | ...பேய்ச்சி |
ஒத்த நூற்பா : ‘அன்ஆள் அள்ஆள் அர்ஆர் பம்மார் அஆ குடுதுறு என்ஏன் அல்அன் அம்ஆம் எம்ஏம் ஓமொடு உம்ஊர் கடதற ஐஆய் இம்மின் இர்ஈர் ஈயர் கயவும் என்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினும் சிலவே.’ நன். 139 இறந்தகால இடைநிலை 47. கடதற ஒற்றுஇன் ஐம்பால் மூவிடத்து இறந்த காலம் தரும்தொழில் இடைநிலை. நிறுத்த முறையானே இடைநிலை கூறுவனவற்றுள் இஃது இறந்தகாலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதங்களின் இடைநிலைகள் கூறுகின்றது. இ-ள்: கடதற என்னும் நான்கு மெய்களும் இன்னும் ஆகிய ஐந்தும், ஐம்பால் மூவிடத்தும் இறந்த காலம் காட்டும் வினைமுற்றுப் பகுபதங்களின் இடைநிலைகளாம் என்றவாறு. ககரம் முதல்நிலை எழுத்தாயும் தகரம் முதல்நிலை எழுத்து ஆகாதும் ஏனை இரண்டும் முதல்நிலை எழுத்தாயும் அதற்கு இனமாயும் அடுத்துவரும். |