பக்கம் எண் :

294

வரலாறு : நக்கான் நக்காள் நக்கார் நக்கது நக்கன நக்கேன் நக்கேம் நக்காய் நக்கீர் எனவும், விட்டான் விட்டாள் விட்டார் விட்டது விட்டன விட்டேன் விட்டேம் விட்டாய் விட்டீர் எனவும். உண்டான் உண்டாள் உண்டார் உண்டது உண்டன உண்டேன் உண்டேம் உண்டாய் உண்டீர் எனவும், உரைத்தான் உரைத்தாள் உரைத்தார் உரைத்தது உரைத்தன உரைத்தேன் உரைத்தேம் உரைத்தாய் உரைத்தீர் எனவும். உற்றான் உற்றாள் உற்றார் உற்றது உற்றன உற்றேன் உற்றேம் உற்றாய் உற்றீர் எனவும், தின்றான் தின்றாள் தின்றார் தின்றது தின்றன தின்றேன் தின்றேம் தின்றாய் தின்றீர் எனவும், உறங்கினான் உறங்கினாள் உறங்கினார் உறங்கிற்று உறங்கின உறங்கினேன் உறங்கினேம் உறங்கினாய் உறங்கினீர் எனவும் வரும்.

உரையிற்கோடலான், நக்கிலன் நக்கனன்அல்லன், நக்கிலான் நக்கான் அல்லன், உண்டிலன் உண்டனன் அல்லன். உரைத்திலன் உரைத்தனன் அல்லன். தின்றிலன் தின்றலன் தின்றனன் அல்லன், தின்றிலான் தின்றான் அல்லன, உறங்கிலன் உறங்கினன் அல்லன் உறங்கிலான் உறங்கினான் அல்லன் என மறைக்கண்ணும் இவ்விடை நிலைகள் வேறு சில எழுத்துக்களோடு கூடி இறைந்த காலம் காட்டும் எனவும். எஞ்சியது தப்பியது போயது போய என யகரமும், போயன என அன்னும், போனான் போனது என னகரமும் சிறுபான்மை இறந்த காலம் காட்டும் எனவும் கொள்க. பிறவும் அன்ன. 10

விளக்கம்: உடன்பாட்டு வினைமுற்றுக்கள் யாவும் ஆண் பெண் பலர் ஒன்று பலஎனப் படர்க்கை ஐம்பாலுக்கும் தன்மை ஒருமை பன்மைக்கும் முன்னிலை ஒருமை பன்மைக்கும் வருதற்கு எடுத்துக்காட்டுக்கள் இந்நூற்பா உரையில் காட்டப்பட்டுள்ளன.

உரையிற்கோடலான் குறிக்கப்பட்ட செய்திகள் நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் சொற்படல வினை