295 யியலில் தன்மைப்பன்மை வினைமுற்று முதலியன பற்றி அமைந்த 204-219 நூற்பாக்களில் கூறிய எடுத்துக் காட்டுக்களை உட்கொண்டு சொல்லப்பட்டன. எதிர்மறையிலும் இறந்த காலத்தை வினைமுற்றுச் சொல் காட்டுமாறு விளக்கப்பட்டுள்ளது. எஞ்சியது முதலியவற்றில் யகரமும், போயன என்பதில் அன்னும் போனான் முதலியவற்றில் னகரமும் இறந்த கால இடைநிலை என்பது இவர் கருத்து. இனி, இறந்தகால இடைநிலைகளுள் ‘இன்’ என்பது தான் முழுவதும் நிற்றலும், இகரம் கெட்டு னகரவொற்றேயாகி நிற்றலும், னகரம்கெட்டு இகர உயிரேயாகி நிற்றலும் இரண்டு எழுத்தும்கெட்டு அவ்விடைநிலையே மறைந்து நிற்றலும் உண்டு என்று கொள்ப. போயினான் -போ+இன்+ஆன் போனான் -போ+(இ)ன்+ஆ... மேவிய - மேவு+இ(ன்)+அ போய-போ+(இன்)+அ போயன என்பது போயின என்பதன் சிதைவாம். ஆகவே, யகரமும் அன்னும் னகரமும் இன் என்ற இடைநிலையின் சிதைவே என்பது பலர் கருத்தாகும். ஒத்த நூற்பா: ‘தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து இறந்த காலம் தருந்தொழில் அடைநிலை.’ நன். 142 நிகழ்கால இடைநிலை 48 ஆநி.......று கி.........று கிறுமூ விடத்தும் ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை |