பக்கம் எண் :

320

சிறுபான்மை இடைச்சொல்லும் பெயர் எனப்படும். உரிச்சொல்லும் பெயரினும் வினையினும் மெய்தடுமாறும்! ஆதலின் இவையும் பெயர்வினையுள் பெரும்பாலும் அடங்கின. அடங்காதன ‘இடைஉரி வடசொல்லின்’ இ. வி. 147 என்புழிக் கூறப்படும்.

பெயர்ச்சொல்:

மரம் - மெய்முதல் மெய்ஈறு.

இலை - உயிர்முதல் உயிர்ஈறு.

ஆல் - உயிர்முதல் மெய்ஈறு.

விள - மெய்முதல் உயிர்ஈறு.

வினைச்சொல்:

வந்தான் - மெய்முதல் மெய்ஈறு.

உண்டன - உயிர்முதல் உயிர்ஈறு.

உண்டான் - உயிர்முதல் மெய்ஈறு.

வந்தன - மெய்முதல் உயிர்ஈறு.

இடைச்சொல்:

மன் - மெய்முதல் மெய்யீறு.

அம்ம - உயிர்முதல் உயிர்ஈறு.

அந்தில் - உயிர்முதல் மெய்ஈறு.

மற்று - மெய்முதல் உயிர்ஈறு.

உரிச்சொல:்

மல்லல் - மெய்முதல் மெய்ஈறு.

உறு - உயிர் முதல் உயிர்ஈறு.

அலமரல் - உயிர்முதல் மெய்ஈறு.

தவ - மெய்முதல் உயிர்ஈறு.