பக்கம் எண் :

319

தம்மொடு தாம் வருதல்-பல+பல; சில+சில என்றாற் போல்வன.

பிறவருதல் பல+கற்றான் என்றாற் போல்வன. தம்மொடு தாம் புணர்தல்-ஒரு சொல்லொடு மற்றொரு சொல் புணர்தல்.

வேற்றுமை-பெயர்ப்பொருளை வேற்றுமை செய்யும் இரண்டு முதல் ஏழு ஈறாகிய வேற்றுமைப் பொருள். அல்வழி-வேற்றுமை அல்லாதது.

மெய்யீற்றுச் சொற்களும் மெய்முதற் சொற்களுமே பெரும்பான்மையை ஆதலின், உயிரை நிறுத்தமுறை பற்றி முற்கூறாது மெய்யைச் சிறப்பு முறை பற்றி முற் கூறினார்.

வட்டம்-இயல்பு மெய்யீறு; வட்ட-விதி உயிர்ஈறு.

தமிழ்-இயல்பு மெய்யீறு; தமிழ்-விதி உயிர்ஈறு.

நீ-இயல்பு உயிர்ஈறு’ நின்-விதி மெய்ஈறு.

ஆ-இயல்பு உயிர்ஈறு; ஆன்-விதி மெய்ஈறு.

ஆ என்ற சொல் பெற்றத்தின் பெண்பாற்பெயர்.

னகரச்சாரியை பெற்ற ஆன் என்ற சொல் வேறு; இயல்பு ஆகிய ஆன் என்ற சொல் வேறு. இயல்பாகிய ஆன் என்ற சொல் இருபாற்கும் பொது.

‘ஆன்ஒற்று அகரமொடு நிலையிடன் உடைத்தே’ தொல்-232 என்ற நூற்பா இயல்பாகிய ஆன் என்ற சொல் பற்றியது.

‘பெற்றமும் எருமையும் மரையும் ஆவே’ தொல், பொருள். 615 என்பது; இயல்பாகிய ஆ என்பது.

பிறிது-இயற்கை ஈற்றின் விதி ஈறு பிறிது ஆதல். நயம்-பொருளின் தன்மை பலவற்றுள் ஒரு தன்மையை அறிதல்.