318 வருமொழி முதற்கண் வல்லெழுத்துவரின் அது வன்கணம்! மெல்லெழுத்தும் இடைஎழுத்தும் உயிர் எழுத்தும் வரின் அது இயல்புகணம். பொதுவகையான் புணரும் புணர்ச்சி-தொல்காப்பிய எழுத்துப் படலப் புணரியலில் கூறப்படும் புணர்ச்சி. பலசெய்திகளை உள்ளடக்கித் தொக்குப் புணரும் புணர்ச்சி-தொகைமரபில் கூறப்படும் புணர்ச்சி. வெண்குடைப் பெருவிறல் வழுதியானவன் ஏனைய கருங்குடையும் செங்குடையும் உடையனேனும் பிறரிடம் இல்லாத வெண்குடையைத் தானே உடையன் ஆதலின் அப்பெயரினன் ஆயவாறுபோல, பிற புணர்ச்சியினைக் கூறினும் ஏனைஇயல்களுள் கூறப்பெறாத உயிரீற்றுப் புணர்ச்சியைத் தானே கூறுவதால் அப்பெயர்த்து ஆயிற்று. ‘ஒருபெயர்ப் பொதுச்சொலுள் உள்பொருள் ஒழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்’ தொல். சொல். 49 ஆதலின் தலைமை பற்றி உயிரீற்றுப் புணரியல் என்ற பெயர் பெற்றது. ஆதீண்டுகுற்றியில் ஏனை விலங்குகளும் உராய்தல் கூடுமாயினும், தலைமை பற்றி ஆவின் பெயரால் அது பெயரிடப்பட்டது. எழுத்து மொழியாமாறு சென்ற இயலில் கூறப்பட்டது. அம்மொழிகள் தம்மொடும் பிறவொடும் கூடித் தொடர் ஆதலைச் சுட்டுவன இவ்வியல்கள் மூன்றும், |