317 திரிந்தும்கெட்டும் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாய்ப் பொருள் இயைபு இன்றி வருதலும் கொள்க. பொருள் இயைபு இன்றி வருதல் நிலையாது என்றலாம் என்று உணர்க. விளவினைக் குறைத்தான், விளவினது கோடு என்புழிச் சாரியையும் உருபும் நிறுத்தசொல்லாயே நிற்கும். இயல்பாய் இயைதல்-பொன்மணி புகழழகிது ஒளிமணி எனமுன் நின்றபெற்றியின் வேறுபடாமை இயைதல், விகாரமாய் இயைதல்-அப்பெற்றியின் வேறுபட்டு இயைதல். விகாரத்து இயைவது எனப் பொதுப்படக் கூறிய அதனானே. ஒன்றே அன்றி நிலப்பனை- பனங்காய் என ‘ஒரு புணர்க்கு இரண்டும் மூன்றும் உறப் பெறும்’ நன் 156 எனவும் கொள்க. இயல்பு ஒரு தன்மைத்து ஆதலின், அதனை ஒழித்து விகாரக் கூறுபாடு மேற்கூறுப. நிலைமொழியது ஈற்றெழுத்து முன்பிறந்து கெட்டுப் போக வருமொழியின் முதலெழுத்துப் பின்பிறந்து கெட்டமையின் முறையின் பிறந்து நின்று கெடுவன ஒருங்குநின்று புணருமாறு இன்மையின் புணர்ச்சி என்பது ஒன்று இன்றாம் பிறவெனின், அச்சொற்களைக் கூறுகின்றோரும் கேட்கின்றோரும் அவ்வோசை இடையறவுபடாமை உள்ளத்தின்கண்ணே உணர்வர் ஆகலின் அவ்வோசை கேடின்றி உள்ளத்தின்கண் நிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே, பின் கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயாம் என்க. 1 விளக்கம் : நிறுத்தமுறை-‘எண்பெயர்’ என்ற இரண்டாம் நூற்பா. தம்மொடுதாம் புணருமாறு கூறும் இயல்கள் - உயிரீற்றுப் புணரியலும் மெய்யீற்றுப் புணரியலும். தாம் உருபொடு புணருமாறு கூறும் இயல்- உருபு புணரியல். |