பக்கம் எண் :

316

எனப் பெயர்ச்சொல்லொடு வினைச்சொல் வருதலும், வந்தான் சாத்தன் என வினைச்சொல்லொடு பெயர்ச்சொல் வருதலும் ‘அது மற்றம்மதானே’ என இடைச்சொல்லொடு இடைச்சொல் வருதலும். ‘கொம்மைக் குழகாடும் கோலவரை மார்ப’ என உரிச்சொல்லொடு உரிச்சொல் வருதலும், ‘அது கொல்தோழி காமநோயே’ எனவும், ‘மல்லல் மார்பு அடுத்தனன் புல்லுமாறு எவனோ’ எனவும் அவற்றொடு பிற வருதலும் ஆம்.

‘நிலைவருமொழிகள்’ என்றது, ஈண்டு ஆகுபெயர், ‘நிலைவருமொழிகள் எனப் பொதுப்படக் கூறிய அதனால், சாத்தன் வந்தான் வந்தான் சாத்தன் என நிறுத்த சொல்லும் அதனை முடித்தலைக் குறித்துவரும் சொல்லுமாய் வருதலும்; அங்ஙனம் வருங்கால் அவை பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது பதினாயிரத்தொருபஃது எனமுறையே நிலைமொழி அடைஅடுத்தும் வருமொழி அடைஅடுத்தும் இருமொழியும் அடையடுத்தும் வருதலும்; முன்றில் மீகண் என இலக்கணத்தொடு பொருந்தியும் சோணாடு பாண்டிநாடு என இலக்கணத்தொடு பொருந்தாதும் மரூஉச் சொற்களாய் வருதலும்; ‘கருங்கால் ஓமைக் காண்பின் பெருஞ்சினை’ அகநா. 3-2 எனவும்.

‘இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப’           அகநா. 4-3,4

எனவும்,

‘தெய்வ மால்வரைத் திருமுனி அருளால்’           சிலப்,3-1

எனவும், முறையே ஓமைச்சிளை-மருப்பின் இரலை- தெய்வவரை- என ஒட்டி ஓமையினது சினை. மருப்பினை உடைய இரலை. தெய்வத்தன்மையை உடைய வரை எனப் பொருள் தருகின்றன காண்பு-பரல்-மால்-என்பவற்றொடு ஒட்டினாற் போன்று ஒட்டி மிக்கும்