315 னான் ஆதல் புணருமிடத்து, நிலைமொழியது ஈற்றொழுத்தும் வருமொழியது முதல் எழுத்தும் இயல்பாகியும் விகாரமாகியும் பொருந்துவது முன்னர்க் கூறிய புணர்ச்சியுள் தம்மொடுதாம் புணரும் புணர்ச்சியாம் என்றவாறு. மெய்யை முற்கூறினார். இயல்பும் விகாரமும் ஆகிய இருகூற்று நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா என்றற்கு, வட்டப்பலகை தமிழ்ப்பிள்ளை நின்கை ஆன்கன்று என்றாற்போல விதிவகையான் எய்திய உயிர் ஒற்று இறுதிகளும் புணர்ச்சி எய்தல் ஈண்டுக் கோடும். மேல் இவற்றையும் விரிவு அஞ்சிப் ‘பிறிது’ என்னும் நயம் பற்றி இயற்கை வகையான் நின்ற உயிர் ஒற்று இறுதிகளுள் அடக்கிச் செய்கை செய்ய ஆகலின் ஈண்டு இருபதங்களும் என்றன அவற்றின் திறனாகிய பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் சிறுபான்மை இடைச்சொல்லும் உரிச்சொல்லும் எனக் கொள்க. அவை மெய்யும் உயிரும் முதலும் ஈறுமாய் வருமாறு: மரம் இலை எனவும், ஆல்விள எனவும், வந்தான் உண்டன எனவும், உண்டான் வந்தன எனவும், மன் அம்ம எனவும். அந்தில் மற்று எனவும், மல்லல் உறு எனவும், அலமரல் தவ எனவும் முறையே காண்க. அவை தம்மொடும் பிறவொடும் வருமாறு :- ஆல் வீழ்ந்தது என மெய்யிறு சொல்முன் மெய் முதல் மொழி வருதலும், ஆ உண்டு என உயிர் இறு சொல்முன் உயிர் முதல்மொழி வருதலும், ஆலிலை என மெய் இறு சொல் முன் உயிர் முதல்மொழி வருதலும், ஆவெளிது என உயிர்இறு சொல்முன் மெய்முதல் மொழி வருதலும், சாத்தன்கை எனப் பெயர்ச் சொல்லொடு பெயர்ச்சொல் வருதலும், வந்தான் போயினான் என வினைச்சொல்லொடு வினைச்சொல் வருதலும். சாத்தன் உண்டான் |