பக்கம் எண் :

414

வரும்வழிச் சாரியை கெடுதலும் மெய்வேறு
ஆகுமிடத்து இயற்கை ஆதலும் பொதுப்பெயர்க்கு
அவ்வியல் நிலையலும் ஐஉருபு இயல்பே,’           மு. வீ. பு. 37

மூன்றாம் வேற்றுமை முடிபு

76. புள்ளியும் உயிரும் ஆய் இறு சொல்முன்
தம்மின் ஆகிய தொழில்மொழி வரினே
வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆவன உள.

இது மேல் உயிர் ஈற்றிற்கும் புள்ளி ஈற்றிற்கும் வேற்றுமைக் கண் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமை முடிபு கூறுகின்றது.

இ-ள்: ஒற்றாகியும் உயிர்ஆகியும் ஈறாய் நின்ற நிலை மொழி முன்னர் அந்நிலைமொழிப் பொருளான மூன்றாவதன் பொருள் ஆகிய வினை முதல் பொருள்கள் தம்மான் உளவாகிய தொழிற்சொல் வருமாயின், புணர்ச்சிக்கண்மேல் வேற்றுமைப் புணர்ச்சியிடத்து மிகும் எனக் கூறும் வல்லெழுத்து மிகாது உறழ்ந்து முடிவனவும் இயல்பாய் முடிவனவும் உள என்றவாறு.

எ-டு: சூர்கோட்பட்டான் சூர்க்கோட்பட்டான் வளி கோட்பட்டான் வளிக்கோட்பட்டான் - சாரப்பட்டான்- தீண்டப்பட்டான்- பாயப்பட்டான்- என இவை உறழ்ந்தன. நாய் கோட்பட்டான் புலிகோட்பட்டான்- சாரப் பட்டான்- தீண்டப்பட்டான்- பாயப்பட்டான்-இவை இயல்பாயின. பிறவும் அன்ன.

‘புள்ளியும் உயிரும்’ என்ற முறையல கூற்றினானே. பேஎய் கோட்பட்டான் பேஎய்க் கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் எகரப்பேறும் பாம்பு கோட்பட்டான் பாம்புக் கோட்பட்டான் பரப்புக் கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி ஒற்றுத்திரிதலும்