415 திரியாமையும் கொள்க. இவ்விறுதிகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க. 24 விளக்கம்: வேற்றுமைக்கண் கூறும் முடிபு-82, 133ஆம் நூற்பாக்கள், மூன்றாவதன் பொருள்கள் கருவி, கருத்தா, உடன்நிகழ்வு என்பன. அவற்றுள் ஈண்டுக் கருத்தாப் பொருள் கொள்ளப்பட்டது. நாய் கோட்பட்டான் என்ற தொடரில் கருத்தா நாய்; அதன் தொழில் கொள்ளுதல். சாத்தன் நாய் கோட்பட்டான் என்ற தொடரில், சாத்தன் முதல் வேற்றுமைக் கருத்தா. நாய் மூன்றாம் வேற்றுமைக் கருத்தா. ‘கோட்படுதல் சாத்தன் தொழில். கோள் நாயின் தொழில். பிறவும் அன்ன. சூர் கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான் முதலியன இடையே வல்லொற்று மிக்கும் மிகாதும் உறழ்ந்தன. நாய் கோட்பட்டான் முதலியன இயல்பாயின. உயிரை முன் கூறிப்பின் மெய்யினைக் கூறுதல் வேண்டும். அங்ஙனம் கூறாததனை உட்கொண்டு, பேய் என்ற நிலைமொழி கோட்பட்டான் என்ற வருமொழியொடு புணரும்வழிப் பேஎய் என்ற எழுத்துப்பேறு ஒன்றே பெறுதலும், எழுத்துப் பேற்றினுடன் வருமொழி வல்லெழுத்து மிகப்பெறுதலும் ஆகிய இருநிலையும் பெற்றமை கண்டு. பாம்பு என்ற நிலைமொழி கோட்பட்டான் என்ற வருமொழியொடு இயல்பாய்ப் புணர்தல். இடையே வல்லொற்று மிக்குப் புணர்தல், நிலைமொழி இடையே உள்ள மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து வருமொழி வல்லொற்று இடையே மிக்குப் புணர்தல் என்ற மூன்று நிலையும் உண்டு. |