பக்கம் எண் :

416

இந்நூற்பாவின் எடுத்துக்காட்டுக்களும் விளக்கங்களும் தொல்காப்பியம் 156ஆம் நூற்பாவில் நச்சினார்க்கினியர் உரைத்தனவேயாகும்.

ஒத்த நூற்பாக்கள்:

‘புள்ளி இறுதியும் உயிர்இறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின்
மெம்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்
அம்முறை இரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.’           தொல். 156

‘புள்ளியும் உயிரும் ஆயிறு சொல்முன்
தம்மின் ஆகிய தொழில்மொழி வரினே
வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும்,’           நன். 256

‘இனமாம் தொழிற்பெயர் எய்தின் வேற்றுமை
வழிஇயல் பாதலும் உறழ்தலும் ஆகும்.’           மு. வீ. பு. 36

இகர ஐகார ஈற்று அல்வழி முடிபு

77. வேற்றுமை அல்வழி இஐ என்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம்
இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்.

இஃது இகர ஈற்றுப் பெயர்க்கும் ஐகார ஈற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.

இ-ள்: வேற்றுமை அல்லாத இடத்து இஐ என்னும் ஈற்றை உடைய பெயர்ச்சொற்கள் மூவகை ஆகிய முடிபு நிலையை உடைய, அம்முடிபை உடைய சொற்கள் தாம்