417 இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்துமிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் என்று கூறுவர் புலவர் என்றவாறு. எ-டு: பருத்தி குறிது காரைகுறிது - சிறிது - தீது- பெரிது என இவை இயல்பாய் முடிந்தன. ‘மாசித்திங்கள் (சிந் 2929) அலிக்கொற்றன், காவிக்கண்’ ‘சித்திரைத் திங்கள் (சிலப். 5-64) புலிக் கொற்றன் குவளைக்கண்’ என இவை மிக்கு முடிந்தன. கிளிகுறிது கிளிக்குறிது, தினைகுறிது தினைக்குறிது என இவை உறழ்ந்து முடிந்தன. பிறவும் அன்ன. ‘பெயர் நிலைக்கிளவி’ எனவே, பெயர் அல்லாத இவ்விரண்டு ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேல் முடிப்பாம். ‘நிலை என் மிகையானே, இயல்பானும் விதியானும் நின்ற ஐகார ஈற்று இலை என்னும் வினைக் குறிப்பு முற்றுச் சொற்கு உறழ்ச்சி முடிபு கொள்க. விளக்கம்: ‘வேற்றுமை அல்வழி’ என்பது அல்வழியின் இயல்பைச் சுட்டிய தாகும். எழுவாய்த்தொடர் பெரும்பான்மையும் இயல்பாகும் சிறுபான்மை கிளி குறிது கிளிக்குறிது என உறழும். இரு பெயரொட்டுப் பண்புத்தொகை மாசித் திங்கள் என்றாற் போல மிக்கே வரும். மேல் முடிப்பாம் என்றது, ‘இயல்பினும் விதியினும்’ 82 என்ற நூற்பாவை உட்கொண்டு. இயல்பாய் நின்ற இலை என்பதனையும், ஐகாரம் பெற்று இல் என்பது விதி ஐகார ஈறாகிய இலை என்பதனையும் ஒரு நிலையினவாகவே கொண்டு இலை |