418 பொருள் இலைப் பொருள் என்ற உறழ்ச்சி முடிவு கொள்ளப்பட்டது. ஒத்த நூற்பாக்கள் : முழுதும் தொல். 158 ‘அல்வழி இ ஐ முன்னர் ஆயின் இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும்.’ நன். 176 ‘அல்வழி இ ஐ முன்னர் இயல்பு ஆதலும் மிகுதலும் உறழ்தலும் வேண்டப் படுமே.’ மு. வீ. பு. 38 அளவு நிறை எண்ணுப் பெயர்கள் அல்வழிக்கண் தம்மில் புணர்தல் 78. உயிரும் புள்ளியும் இறுதி ஆகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் தத்தம் கிளவி தம்அகப் பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின் ஒத்தது என்ப ஏயென் சாரியை, இஃத அளவும் நிறையும் எண்ணும் ஆகிய பெயர்கள் அல்வழிக்கண் தம்மில் புணருமாறு கூறுகிறது. இ-ள்: உயிரும் புள்ளியும் தமக்கு ஈறாய அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி வருவன உள என்று ஆசிரியரால் கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தமக்கு இனம் ஆகிய சொற்களாய்த் தம்மில் குறைந்த சொற்கள் தம் முன்னே வருங்காலம் தோன்றுமாயின், பொருந்திற்று என்பர் ஆசிரியர், தாம் ஏ என்சாரியை பெற்று முடிதலை என்றவாறு. முந்தை முத்தை என விகாரம் ஆயிற்று. |