பக்கம் எண் :

419

வரலாறு : நாழியே ஆழாக்கு, உழக்கேஆழாக்கு, கலனேபதக்கு எனவும்,

தொடியேகஃசு, கழஞ்சேகுன்றி, கொள்ளேஐயவி எனவும்,

ஒன்றேகால், காலேகாணி, காணியேமுந்திரிகை எனவும்,

முறையே அளவுப் பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயரும் தம்முன்னர்த்தம்மில் குறைந்தன வந்துழி ஏகாரம் பெற்றவாறு காண்க.

இனி, ‘உயிர் இறுதி புள்ளி இறுதி’ என்ற மிகையானே குறுணி நானாழி, ஐநாழி உழக்கு என ஏ என் சாரியை பெறாது வருவனவும் கொள்க.

இன்னும் அதனானே, உழக்கரை - செவிட்டரை- மூவுழக்-கரை-கலவரை எனவும். கஃசரை-கழஞ்சரை- தொடியரை- கொள்ளரை எனவும், ஒன்றரை - பத்தரை எனவும் ஏஎன் சாரியை பெறாதனவும்,

உரிக்குறை - கலக்குறை எனவும், தொடிக்குறை - கொட்குறை எனவும், காணிக்குறை - காற்குறை எனவும் ஏஎன் சாரியைபெறாது வேற்றுமை முடிபுஎய்துவனவும்,

உழக்கின்குறை - ஆழாக்கின்குறை எனவும், கழஞ்சின் குறை- கஃசின் குறை எனவும், ஒன்றின்குறை பத்தின் குறை எனவும் வேற்றுமை முடிபு எய்தாது இன்பெறுவனவும், கலத்துக் குறை என அத்துப்பெற்று முடிவதூஉம், பனையின் குறை-காவின் குறை என இன்பெறு வனவும், பனைக்குறை காக்குறை எனச் சிறுபான்மை இன்பெறாது வேற்றுமை முடிபு எய்துவனவும், தூணிப்பதக்கு எனவும், இரு தூணிப்பதக்கு - முத்தூணிப்பதக்கு எனவும், ஏஎன் சாரியை பெறாது வேற்றுமை முடிபு எய்துவனவும்,