420 தூணித்தூணி - தொடித்தொடி-காணிக்காணி-என்ற தம்முன்னர்த்தாம் வந்து வல்லெழுத்துப் பெறுவனவும், தூணிக்குத்தூணி-இருதூணிக்குத்தூணி எனக் குச்சாரியை பெறுவனவும் கொள்க. உரிக்கூறு, தொடிக்கூறு; காணிக்கூறு; தூணிக்கொள், கலக்கொள், சாமை - தோரை - பயறு - எனப் பொருட் பெயரொடு புணர்வழி, வேற்றுமை முடிபு எய்தின மேத் கூறும் ஈற்றுப் பொதுவிதியானே முடியும் எனக் கொள்க. உழக்கரை, உரிக்குறை, உழக்கின்குறை, கலத்துக்குறை, பனையின்குறை, காவின்குறை, பனைக்குறை, காக்குறை, தூணிப்பதக்கு - என்றல் தொடக்கத்தன உம்மைத் தொகை. உரிக்குறை உரியும் குறையும் என விரிந்துழி உரியும் உழக்கும் எனப் பொருள் தரும். ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு பொருள் உரைத்துக் கொள்க. தூணிக்கொள் என்றால்போல்வன பண்புத்தொகை, உழக்கின் குறை என்றல் தொடக்கத்தன வேற்றுமைக்கண் ஆயின் உழக்கிற்குறை என நிற்கும். கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி அகல் உழக்கு எனவும், கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தைஎனவும் அளவுப்பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலான இவ்வொன்பது எழுத்து என உணர்க. உகரமுதல் நினறப்பெயர் வந்துழிக் காண்க. அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உளவெனப் பட்ட ஒன்பதிற்று எழுத்தே |