பக்கம் எண் :

519

இவை வன்கணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்ற நான்கு கணத்தன.

வருமொழி நகரத்திரிபு ணனமுன் டணவும்’ (இ. வி. 70) என்பதனானும், வருமொழி உயிர் வரும்வழி ‘எண’ என்ற விதியீறு இரட்டுதல் ‘தனிக்குறில்’ ‘முன்ஒற்று’ (66) என்பதனானும் பெற்றாம்.

ஒத்த நூற்பாக்கள்:

‘எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்.’           தொல். 444

‘நமவ என்னும் மூன்றொடு சிவணி
அகரம் வரினும் எட்டன்முன் இயல்பே.’      450

‘எட்டன் உடம்பு ணவ்வாகும் என்ப.’           நன். 193,           மு. வீ. பு, 266

‘பத்து முன்வரும் காலை யான.’           மு. வீ. பு, 267

தொண்ணூறு, தொள்ளாயிரம்

112. ஒன்பானொடு பத்து நூறும் ஒன்றின்
ஒன்றிய இரண்டும் ஊறும் ஆயிரமும்
என்று திரிய இறுதிய கெடுவழி
நின்ற னகரம் நிரலே ணளவா
இரட்டல் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்.

இஃது ஒன்பது என்னும் எண்முன்னர்ப் பத்தும் நூறும் வந்து புணர்வுழிப் படும் செய்கை கூறுகின்றது.

இ-ள் : ஒன்பது என்னும் எண்முன்னர்ப் பத்தும் நாலும் வந்து புணரின், அப்பத்தும் நூறும் நிரல்நிறை வகையானே ஊறு என்றும் ஆயிரம் என்றும் திரிய, நிலைமொழியாய் நின்ற ஒன்பதன் இறுதிக்கண்ணவாகிய குற்றுகரமும் அதன்மேல் நின்ற அகரமும் தம்மால் பற்றப்பட்ட மெய்யொடும் கெடும் இடத்து, அவற்றின்மேல் நின்ற னகர ஒற்று முறையே பத்தின்