பக்கம் எண் :

520

திரிபாகிய ஊறு வந்து புணரும் இடத்து ணகர ஒற்றாய் இரட்டித்தும் நூறின்திரிபாகிய ஆயிரம் வந்து புணருமிடத்து ளகர ஒற்றாய் இரட்டித்தும் நிற்ப, நிலைமொழி ஒகர உயிர்மேல் ஒரு தகரம் ஒற்றாய் வந்து நிற்கும் என்றவாறு.

வரலாறு : தொண்ணூறு, தொள்ளாயிரம் எனவரும்.

வருமொழிச் செய்தியை முற்கூறிய அதனானே ஒற்று, இரட்டாது தொளாயிரம் என வருதலும் கொள்க.

இவ்வெழுத்து இவ்வெழுத்தாயத் திரியும் என்னாது. ஊறு ஆகியும் ஆயிரம் ஆகியும் திரியும் என்றாரேனும்.

‘ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பத்தென் கிளவி ஆய்த பகரம்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்.’           தொல். 445

எனவும்,

‘ஒன்பான் முதல்நிலை முந்துகிளந் தற்றே
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
நூறுஎன் கிளவி நகார மெய்கெட
ஊ-ஆ ஆகும் இயற்கைத்து என்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றம்.’           தொல். 463

எனவும், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாற்றானே அவற்றின் திரிபினை வேறுவேறு பகுத்துக் காண்க.

இவ்வாறே மேலும் விரிவு அஞ்சி, யான் யாம் நீ நீர் என்பன என் எம் நின் நும் ஆமெனக் கூறுப.

‘ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி ஒவ்வொடு