521 தகரம் நிறீஇப்பஃது அகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே.’ நன். 194 எனச் சூத்திரம் செய்யின். முரணுதலால் உளவாகிய நூறும் ஆயிரமும் வந்து புணர்ந்து தொண்ணூறும் தொள்ளாயிரமும் என்று முடிந்துழி, அவை ஒன்பது பத்து ஒன்பதுநூறு எனப் பொருள் தாராது தொள்ளாயிரம் ஒன்பதினாயிரம் எனப் பொருள்தரும் ஆதலின் வழுவாம் என்க. 60 விளக்கம் இந்நூற்பா ஒன்பது+பத்து-தொண்னூறு எனவும், ஒன்பது+நூறு தொள்ளாயிரம் எனவும் ஆயினமைக்கு விதி கூறுகின்றது. இப்புணர்ச்சி கூறுதற்கண், இலக்கண ஆசிரியரிடையே வேறுபாடு மலவாகஉள்ளன ஏனெனின் அவர்கள் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பினரேயன்றிச் சொல்லின் தொல்லுருவம் ஆராயப் புகுந்தார் அல்லர். அஃது அவர் கருத்தும் அன்று; கடனும் அன்று, ஒன்பது + பத்து - ஒன்பது + ஊறு - ஒன் + ஊறு - தொன்+ஊறு - தொண்+ண்+ஊறு-தொண்ணூறு என்றாகும். ஒன்பது+நூறு-ஒன்பது+ஆயிரம்-ஒன்+ஆயிரம்-தொள்+ஆயிரம்-தொள்ள் +ஆயிரம்-தொள்ளாயிரம் என்றாகும். பத்து- ஊறு எனவும், நூறு- ஆயிரம் எனவும் திரிந்து புணரும் என இவர் குறிப்பிட்டார். தொல்காப்பியனார், ஒன்பான்+பஃது-தொன்பான்+பஃது,தொண்ணபான்+பஃது,தொண்ண்+து, தொண்ண்+ஊ+து, தொண்ண்+ஊ+று-தொண்ணூறு எனவும், |