பக்கம் எண் :

532

ஒன்பது என்பதனைப் பிரயோகவிவேகம் சந்திறோக்கிப் பத்துத் திரிந்தமைந்தது என்று கருதும் (பி. வி. 5 உரை)

ஒத்த நூற்பாக்கள்:

‘ஒன்பான் இறுதி உருவுநிலை திரியாது
இன்பெறல் வேண்டும் சாரியை மொழியே.’           தொல். 459

‘ஒன்பான் இறுதி உருவுநிலை திரியாது
இன்பெறல் வேண்டும் சாரியை மரபே.’      470

‘ஒன்று முதலாக எட்டன் இறுதி
எல்லா எண்ணும் பத்தன் முன்வரின்
குற்றிய லுகரம் மெய்யொடும் கெடுமே
முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே.’      433

‘அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை
னஃகான் றஃகான் ஆகிய நிலைத்தே.’      121

‘நிறையும் அளவும் வரூஉங் காலை
குறையாது ஆகும் இன்என் சாரியை,’      438

‘ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.’      435

‘ஆயிரம் வரினே இன்என் சாரியை
ஆவயின் ஒற்றிடை மிகுதல் இல்லை.’      476

‘அளவும் நிறையும் ஆயியல் திரியா.’      477

முழுதும்           நன். 197

‘இரண்டு ஒழித்து ஏனை இருநான்கு எண்களும்
பத்தின் முன்வருங் காலை யான
குற்றிய லுகரம் முற்றக் கெடுமே
ஒன்பான் ஒழியஇன் னொடுவரும் என்ப.’           மு. வி. பு. 256

‘ஆயிரம் வரினும் இன்னொடு நிலையும்.’      258

‘நிறையும் அளவும் நேருங் காலைக்
குறையாது ஆகும் இன்என் சாரியை.’      259