533 ‘ஆயிரம் வரினே இன்னே சகரியை ஆவயின் ஒற்றிடை மிகாதுஇயல்பு ஆகும்,’ 296 ‘அளவும் நிறையும் வரின்இயல்பு ஆகும்.’ ‘அளவும் நிறையும் ஆயியல் திரியா.’ 297 பத்தின்முன் இரண்டு 116. இரண்டு முன்வரின் பத்தின்ஈற்று உயிர்மெய் கரந்திட ஒற்று ன-ஆகும் என்ப. இது பத்தின்முன் இரண்டும் வந்து புணர்வழிப்படுச் செய்கை கூறுகின்றது. இ-ள்: இரண்டு என்னும் எண் பத்து என்னும் எண் முன்னர் வந்து புணரின், இதன் ஈற்று உயிர்மெய் கெட, மேல் என்ற நகரஒற்று னகர ஒற்றாய்ப் திரிந்து முடியும் என்றவாறு. வரலாறு : பன்னிரண்டு என வரும். 64 விளக்கம் பன்னிரண்டு-பத்தும் இரண்டும் என உம்மைத் தொகை. இப்புணர்ச்சிக்கு இந்நூற்பா விதி வகுக்கிறது-பதிற்றிரண்டு என்பது பண்புத்தொகை. அது பத்தாகிய இரண்டு என விரியும், அதற்கு விதி சென்ற நூற்பா என அறிக. ஒத்த நூற்பாக்கள்: ‘பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல் ஒத்தது என்ப இரண்டு வருகாலை.’ தொல். 425 முழுதும் நன். 198, மு. வீ. பு. 257 |