534 சில எண்ணுப்பெயர் இரட்டல் 117. ஒன்பது ஒழிந்தஎண் ஒன்பதும் இரட்டின் முன்னதின் முன்அல உயிர்வரின் வவ்வும் மெய்வரின் வந்ததும் மிகல்நெறி இஃது ஒன்ற முதலிய பத்து எண்ணுள் எட்டு எண் இரட்டியவழிப்படும் செய்கை கூறுகின்றது. இ-ள்: ஒன்பது என்னும் எண் ஒன்றனையும் ஒழித்து, நின்ற ஒன்றுமுதல் பத்து ஈறான எட்டு எண்ணும் தம்முன்னர்த் தாம்வந்து புணரின், நிலைமொழியின் முதலெழுத்து ஒன்று நிற்க அல்லன எல்லாம்கெட, உயிர்முதலான எண் வந்து புணரின் வகரஒற்றும் மெய்முதலான எண் வந்து புணரின் வந்தமெய்களும் இடையேமிக்கு முடிதல் வரலாற்று முறைமை என்றவாறு. வரலாறு : ஒவ்வொன்று இவ்விரண்டு மும்மூன்று நந்நான்கு எனவரும். பிறவும் அன்ன. ‘நெறி’ என்ற மிகையானே, மூன்று நான்கு ஆறு என்பனவற்றிற்குக் குறுக்கமும், பத்துப்பத்து பத்துபத்து என்னும் விகற்பமும், நானான்கு நந்நான்கு என்னும் திரிபும், ஐயைந்து ஐவைந்து என்னும் உறழ்ச்சியும், ஒரோவொன்று கழக்கழஞ்சு கலக்கலம் என்றல் தொடக்கத்து முடிவும் கொள்க. எண் பெயரோடு எண்முதலியன புணருமிடத்து ஈண்டுக் கூறிய சிறப்புவிதியன்றித் தனிக்குறில் முன் ஒற்றுவரின் இரட்டலும்(66) வரும் நகரம் திரிந்தபின் மாய்வும் (139) உடம்படுமெய் பெறுதலும் (68) ஏற்புழிக் கொணர்ந்து முடித்துக் கொள்க. ஒவ்வொன்று அவ்வாறு என்றால்போல்வனவற்று வகரம் உடம்படுமெய் அன்மை இவ்விரண்டு என்பதனால் அறிக. நூற்றொன்று நூற்றுப்பத்து நூற்றுத் |