535 தொண்ணூறு நூற்றிதழ்த்தாமரை, நூற்றுக்கால் மண்டபம், இருநூற்றொன்று இருநூற்றொருபது, இருநூற்றுக்கலம்-சாடி-தூதைபானை-கழஞ்சு-தொடி-என்றால்-தொடக்கத்தன எல்லாம் குற்றுகர ஈற்றுப் பொது விதியான் (106-111) முடித்துக் கொள்க. 65 விளக்கம் ஒரோஒன்று என்பது உடம்படுமெய்யுடன் ஒரோவொன்று எனப்புணர்ந்தசெய்தி ‘தம்மியல் கிளப்பின் தம்முன் தாம் வரும்-எண்ணின் தொகுதி’ (தொல் 482) என்புழிக் கூறப்பட்டது. நூற்றொன்பது என்பது ‘நூறுஎன் கிளவி ஒன்றுமுதல் ஒன்பாற்கு ஈறுசினை ஒழிய இனஒற்று மிகுமே’ தொல். 472 என்ற நூற்பாவாலும். நூறு என்பதனொடு பிறஎண்ணுப் பெயரும் பிறபொருட்பெயரும் புணர்ந்த நூற்றுப்பத்து - நூற்றுத்தொண்ணூறு - நூற்றிதழ்த்தாமரை - நூற்றுக் கால் மண்டபம் - இருநூற்றொன்று-என்பன அந்நூற்பாவின் ‘ஈறுசினை’ என்ற மிகையாலும், இருநூற்றொருபது என்பது ‘அவைபூர் பத்தினும் அத்தொழிற்று ஆகும்’ தொல். 473 என்னும் நூற்பாவின் ‘ஆகும்’ என்ற மிகையாலும், இருநூற்றுக்கலம் என்பது முதலியன ‘அளவும் நிறையும் ஆயியல் திரியாது குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர்’ தொல். 474 என்ற நூற்பாவின் ‘திரியாது’ என்ற மிகையாலும் நச்சினார்க்கினியரால் கொள்ளப்பட்டன, |