536 இந் நூற்பாவின் கண்ணும் ஏழ் என்ற ழகர ஈற்றுப் பெயர் விலக்கப்பட்டமை அறிக. ஒவ்வொன்று என்பதன்கண் வந்த நிலைமொழி வகரம் இப்புணர்ச்சி விகாரத்தான் வந்தது. அஃது உடம்படுமெய் அன்று. உடம்படுமெய் ஆய்ன் இரண்டு +இரண்டு இய்யிரண்டு என்றே யகர உடம்படுமெய் பெற்றுப் புணர்தல் வேண்டும். இகரத்தை அடுத்தும் வகரமே வந்து இவ்விரண்டு என்றே முடிதலின், இவ்வகரம் உடம்படுமெய் அன்று என்பதே அறிக. ஒவ்+ஒன்று-ஒவ்வொன்று ; தனிக்குறில் முன்ஒற்று உயிர்வர இரட்டியது. நால் + நான்கு - நானான்கு: குறில் செறியாத லகரம் வரும் ந - திரிந்தபின் மாய்ந்தது. (139) ஐ+ஐந்து-உடம்படுமெய் ஆகிய யகரம் இடையே பெற்று ஐயைந்து என முடிந்தது. நூறு+ஒன்று-‘நெடிலோடு உயிர்த்தொடர்’ 102 என்ற நூற்பாவின் ‘மிகவே’ என்ற மிகையான் இவ்வும்மைத் தொகைத்தொடர் நிலைமொழி ஒற்று இரட்டியது ‘குற்றியலுகரமும் அற்றென மொழிப’ (65) என்பதனால் குற்றியலுகரம் வருமொழி உயிர் ஏறிமுடிய அமைந்தது, இரு நூற்றொன்று, இருநூற்றொருபது என்பனவும் அன்ன. நூற்றுப்பத்து நூற்றுத்தொண்ணூறு நூற்றிதழ்த் தாமரை நூற்றுக்கால்மண்டபம் இருதூற்றுக்கலம்-சாடி முதலியன ‘வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி’ (100) என்பதனால் இடையே வல்லொற்று மிக்கு முடிந்தன. இவ்வாசிரியர் நூறு என்பதனை நிலைமொழியாக நிறுத்தித் தனியே நூற்பாக்கள் யாத்திலர், இது சுருக்க |