பக்கம் எண் :

555

‘மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினைஎஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.’      333

‘எகின்மரம் ஆயின் ஆண்மர இயற்றே’      336

‘தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறபோய் வலிமெலி மிகலும்ஆம் இருவழி.’           நன். 214

‘தேன்எனும் மொழிமெய் சேர்இரு வழியும்
தன்இயல் பாம்மெலி வரின்தன் ஈற்று அழிவும்
வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலும் ஆம்.’           தொ.வி. 25

‘தேன்மொழி மெய்வரின் இயல்பும் மென்மை
மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலும்ஆம் இருவழி.’           மு. வீ. பு. 171

‘இறால்வரின் இயல்பா தலும்இன் அடைதலும்
ஈறழிந்து இரண்டு தகரமெய் ஒற்றலும்
மற்றதன் இயற்கையாம் வழுத்துங் காலே.’     172

‘மன்னு சின்னும் ஆனும் ஈனும்
அன்ன இயல்பின ஆம்என மொழிப,’     164

‘எகின்மரம் ஆயின் அம்மொடு சிவணும்’.      166

மரம்அல் ‘எகின்’ முன் வன்கணம்

125 மரம்அல் எகின்மொழி இயல்பும் அகரம்
மருவ வலிமெலி மிகலும் ஆகும்.

இது னகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கலும் எய்தாதது எய்துவித்தலும் நுதலிற்று.