619 உளவே ‘ 186 என்ற உருபியல் நூற்பா உரையில் திருமினை திருமினொடு என்பன காட்டப்பட்டுள்ளன. (தொல். 202 நச். கொள்க) வேயின்புறம் (வேயின் தலை-405 நச். ரகரஈறு பொதுவாக இன்பெறுதலைத் தொல்காப்பியனார் குறிப்பிடவில்லை. நச்சினார்க்கினியர் கருத்தும் அதுவே. ஆனால் உருபு ஏற்குங்கால் நாரினைஎன இன்பெறுதலைக் குறித்துள்ளார். (202 நச்.) லகரளகர னகர ஈறுகளும் உருபுபுணர்ச்சிக்கண் இன்பெறுதலையே நச்சினார்க்கினியர் கல்லினை முள்ளினை பொன்னினை என்று எடுத்துக்காட்டியுள்ளார். (202 நச்.) தெவ்வுக்கடுமை என்பதே தொல்காப்பியனாருக்கு உடன்பாடு. ஆனால் உருபு ஏற்கும்போது தெவ்வினை தெவ்வினொடு என இன்பெறுதலை ‘ஏனைவகரம் இன்னொடு சிவனும்’ (184) என்ற நூற்பாவால் தெரிவிக்கிறார். தெவ்வின் கடுமை 202 நச். யாழின்கோடு -405 நச். நாகின்கால் வரகின்கதிர்-412 நச். தொல்காப்பியனார் உருபுபுணர்ச்சிக்குச் சாரியை 173- 182, 184-186, 189, 195, 198-200 ஆகிய நூற்பாக்களில் கூறியதுபோலப் பொருட்புணர்ச்சிக்குப் பெரும்பாலும் வெளிப்படையாகக் கூறாததனால் உரையாசிரியர்களே பொருட் புணர்ச்சிக்கண் வரும் சாரியைப்பேற்றில் பெரும்பாலானவற்றை இலேசாற் கொள்வாராயினர். ‘கரியவற்றுக்கோடு’ தொல்.220 ‘ஆன்கோடு மான்கோடு’ 231 ‘ஊன்குறை’ 269 ‘கோஒன்குணம்’ ஒன்சாரியை 294 |