பக்கம் எண் :

618

பொருட் புணர்ச்சிக்கு விதி தனியே கூறுவார். சுருக்க நூலாதலின் இதன்கண் உருபுபுணர்ச்சியின் முடிபே பொருட் புணர்ச்சிக்கு மாட்டேற்றான் கொள்ளப்படுகிறது. உரைச் செய்திகள் நச்சினார்க்கினியர் உரையைப் பெரும்பாலும் உட்கொண்டு சொல்லப்பட்டவை.

விளவின்கோடு - தொல். 219 நச்.
மூங்காவின் கால் - 226 நச்.
கிளியின் கால் - 246 நச்.

ஈகார ஈறு இன்பெறுதல் தொல்காப்பியனாருக்கு உடன்பாடன்று. (173)

எருவின் குறுமை 260 நச்.
கொண்மூவின் குழாம் 270 நச்.
சேவின்கால் சே என்ற மரத்தின் கால் 279 நச்.
சே என்பது பெற்றமாயின் இன்பெறுதல் 279

ஐகார ஈறு இன்பெறுதல் தொல்காப்பியனாருக்கு உடன்பாடன்று (173)

ஓகாரஈறு இன்பெறுதலே தொல்காப்பியனார் கருத்து (180) உருபு ஏற்புழி இன்பெறுதலை நச்சினார்க்கினியர் மிகையாற்கொண்டு, சோவினை-சோவினொடு-என்று எடுத்துக் காட்டுத் தந்துள்ளார். பொருட்புணர்ச்சி 202.

கௌவின் கடுமை - 295 நச்.
உரிஞின் கடுமை |
உரிஞின் குறை | 299 நச்.
வெண்ணின் கரை - 306 ,,
பொருநின் குறை - 299 ,,

திருமின்குறை- தொல்காப்பிய உரையில் எடுத்துக் காட்டப்படவில்லை, ‘இன்இடை வரூஉம் மொழியுமார்