பக்கம் எண் :

617

கரியேம் என்னும் மகரஈற்றுத் தன்மைப்பெயர் நம்மும் உம்மும் பெறும் 157 உரை என்றார்.

ஈண்டும் அவ்வாறே கரியேம்நங்கையும் எனவும்;

கரியார் கரியீர் என்னும் ரகரஈற்றுப் படர்க்கைப் பெயரும் முன்னிலை பெயரும் முறையே தம்மும் உம்மும், நும்மும் உம்மும் பெறும் 157 உரை என்றார்.

ஈண்டும் அவ்வாறே கரியார்தங்கையும், கரியீர் நுங்கையும் எனவும்;

எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயர்,

‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை’-குளற் 582 எனத் தம்முப்பெறாதும் வரும் 157 உரை என்றார்.

ஈண்டும் அவ்வாறே எல்லார் கையும் எனவும்.

எவன் என்னும் னகரஈற்று வினாப்பெயர் அன்கெட்டு அற்றுப்பெற்றும், அன்னோடு அவற்றின் அகரமும் கெட்டும் முடியும் 157 உரை என்றார்,

ஈண்டும் அவ்வாறே எவற்றுக்கோடு எற்றுக்கோடு எனவும்;

எகின் என்னும் னகரஈறு இன்னே அன்றி அத்தும் 157 உரை ஏழ் என்னும் ழகர ஈறும் குற்றுகரஈறும் (157 உரை) அன்அம்பெறும் என்றார் (157 உரை), ஈண்டும் அவ்வாறே எகினத்துக்கால் ஏழன்காயம் கரியதன்கோடு எனவும் முடியும், இன்னோரன்ன பிறவும் இவ்வாறே முடித்துக் கொள்க.

விளக்கம்

தொல்காப்பியனார் உருபியலில் உருபு புணர்ச்சிக்கு விதிகூறி உயிர்மயங்கியல் முதலிய மூன்றனுள்ளும்