பக்கம் எண் :

616

‘யாதன் இறுதியும் சுட்டுமுதல் ஆகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவனும்
ஆய்தம் கெடுதல் ஆவயினான.’      156

என்றார், ஈண்டும் அவ்வாறே யாதன்கோடு அதன்கோடு இதன்கோடு உதன்கோடு என முறையே அன்பெற்றும் ஆய்தம் கெட்டும்;

யா என்னும் ஆகாரஈற்று வினாப்பெயர் அற்றுப் பெறும் 157 உரை என்றார். ஈண்டும் அவ்வாறே யாவற்றுக்கோடு என அற்றுப்பெற்றும்;

அது இது உது என்னும் முற்றுகர ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் அன்பெறும் 157 உரை என்றார்.

ஈண்டும் அவ்வாறே அதன்கோடு இதன்கோடு உதன்கோடு என அன்பெற்றும்;

அவை இவை உவை என்னும் ஐகார ஈற்றுச்சுட்டுப் பெயர்கள் அற்றுப்பெற்று ஐகாரம் கெடும் கெடாதும் வரும் 157 உரை என்றார்.

ஈண்டும் அவ்வாறே அவையற்றுக்கோடு அவற்றுக்கோடு, இவையற்றுக்கோடு இவற்றுக்கோடு உவையற்றுக்கோடு, உவற்றுக்கோடு எனவும்;

யாவை என்னும் ஐகாரஈற்று வினாப்பெயர் ஐகாரம் கெட்டு அற்றுப்பெறும் 157 உரை என்றார்.

ஈண்டும் அவ்வாறே யாவற்றுக்கோடு எனவும்:

கரியவை நெடியவை என்றல் தொடக்கத்து ஐகார ஈற்றுப்பண்புகொள் பெயர்களும் அம்முடிபு எய்தும் என்றார்.

ஈண்டும் அவ்வாறே கரியவவற்றுக்கோடு நெடியவற்றுக்கோடு எனவும்;