615 கோடு மான்கோடு கோன்குளம் ஊன்குறை-சுவை என னகரம் பெற்றும், ‘எல்லாம் என்பது இழிதிணை யாயின் அற்றோடு உருபின் மேல்உம் உறுமே அன்றேல் நம்இடை அடைந்து அற்று ஆகும்’ 152 என்றார். ஈண்டும் அவ்வாறே எல்லாவற்றுக்கோடும் எல்லா நங்கையும் என எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணை ஆனகாலை இடையே அற்றுச்சாரியையும் பொருளின் பின்னே உம்மும், உயர்திணை ஆனகாலை இடையே நம்முச்சாரியையும் பொருளின் பின்னே உம்மும் பெற்றும், ‘எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லும் உருபின் பின்னர் உம்மே’ 153 என்றார், ஈண்டும் எல்லார் தங்கையும் எல்லீர் நுங்கையும் என எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரின் உம்மும் எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரின் உம்மும் கெட்டு முறையே மும்முச் சாரியையும் நும்முச் சாரியையும் இடையே வரப் பொருளின் பின்னே உம்முச்சாரியை பெற்றும்; ‘தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம் நீநீர் என்எம் நின்நும் ஆம்பிற’ 154 என்றார், ஈண்டும் அவ்வாறே தன்கை தங்கை நங்கை என் கை நின்கை நுங்கை எனத் தன் தம் நம் என் நின் நும் எனவும். உரையிற் கோடலான் உன்கை உங்கை எனவும்; ‘வ-இறு சுட்டிற்கு அற்று உறல் வழியே’ 155 என்றார், ஈண்டும் அவ்வாறே அவற்றுக்கோடு இவற்றுக் உவற்றுக்கோடு என அற்றுப் பெற்றும் குற்றொற்று இரட்டாதும்; |