பக்கம் எண் :

614

இஃது இன்னும் ஒருவாற்றான் உயிரும் ஒற்றும் ஆகிய இருதிறத்து ஈற்று வேற்றுமைப் பொருட் புணர்ச்சியை உருபு புணர்ச்சியோடு மாட்டெறிந்து உணர்த்துகின்றது.

(இ-ள்:) மேல் உருபுபுணர்ச்சிக்கண் முடியும் முடிபு எல்லாம் ஈண்டு அவ்வுருபின் பொருளாகிய வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் ஒத்து முடியும் என்றவாறு.

வரலாறு: மேல் உருபு புணர்ச்சிக்கண்

‘எல்லா ஈற்றும் சொல்லுங் காலை
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை’ (இ.வி. 149)

என்றார். ஈண்டும் அவ்வாறே விளவின்கோடு மூங்காவின்கால் கிளியின்கால் தீயின்கடுமை எழுவின் குறுமை கொண்மூவின்குழாம் சேவின்கால் தினையின்கதிர் சோவின்புறம் கௌவின்கடுமை எனவும்,

உரிஞின் கடுமை வெண்ணின்கரை பொருநின்குறை திருமின்குறை பொன்னின்கூட்டம் வேயின்புறம் வேரின் புறம் கல்லின்கடுமை தெவ்வின்கடுமை யாழின்கோடு முள்ளின்கூர்மை எனவும்,

நாகின்கால் வரகின்கால் எனவும் இன்சாரியை பெற்றும், உருபுபுணர்ச்சிக்கண்

‘பல்லவை நுதலிய அகர இறுபெயர்
அற்றொடு சிவணல் எச்சம் இன்றே’      150

என்றார், ஈண்டும் அவ்வாறே கரியவற்றுக்கோடு உள்ளவற்றுக்கோடு இல்லவற்றுக்கோடு பல்லவற்றுக்கோடு சில்லவற்றுக்கோடு உளவற்றுக்கோடு இலவற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவஏறுக்கோடு என அற்றுப் பெற்றும்,

இன்சாரியை அன்றி ஆ மா கோ ஊ என்பன னகரமும் பெற்றுமுடியும் என்றார், (151) ஈண்டும் அவ்வாறே ஆன்