பக்கம் எண் :

613

கடுமை- சிறுமை- தீமை-பெருமை- ஞாற்சி-நீட்சி மாட்சி- வலிமை எனவும்,

தெம்மாண்டது தெம்மாட்சி எனவும் முறையே காண்க.

உம்மையான், உகரப்பேறே வலியுடைத்து, உரையிற் கோடலான், தெம்முனை, தெம்மன்னர் என்புழி மகர ஒற்றாயே நிற்றல் கொள்க. 27

விளக்கம்

தெவ் என்னும் உரிச்சொல் படுத்தல் ஓசையால் பெயராயிற்று. ‘மவ்வும்’ என்ற உம்மை இழிவு சிறப்பு உம்மை.

‘இப் பகை என்னும் பண்புப்பெயர் பண்பியய்ப்பகைப் பொருளை உணர்த்தி ஆகுபெயராய் நின்றவழியும் இவையே காட்டு என்க’ (நன். 236- விருத்தி)

தெம்மன்னர் தெம்முனை என்பன மயிலைநாதர் (நன். 235) உரையில் காட்டியன. உரையிற்கோடல் என்பதனான், தெம்முனை என வகர ஒற்று மகர ஒற்றாய்த் திரிதலும் கொள்க’ என்றார் நச்சினார்க்கினியர் (தொல். 232)

ஒத்த நூற்பாக்கள்:

‘ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே’           தொல். 382

முழுதும்           நன்,236           மு.           வீ. பு. 207

‘தெவ்என்பது இருவழி உ-எய்திச் சேரும்
வலிமிகும் மவ்வரின் வல்வுமவ் வாமென்ப’           தொ.வி. 29

பொருட்புணர்ச்சிக்குச் சிறப்பு விதி

146 உருபின் முடிபவை ஒக்கும்அப் பொருளினும்.