612 இந்நூற்பாவின் செய்தி நிலைமொழி ஈற்றுத் திரிபிற்கே கொள்ளப்படும். இந்நூற்பாவினை அல்வழிப்புணர்ச்சிக்கே கொள்க. வேற்றுமைப் புணர்ச்சி ‘வவ்விரு சுட்டிற்கு அற்று உறல் வழியே’ (155) என்புழிக் கூறப்படும். ஒத்த நூற்பாக்கள்: ‘வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும்,’ தொல். 379 ‘மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து ஆகும்’ 380 ‘ஏனவை புணரின் இயல்பு என மொழிப’ 381 ‘சுட்டு.... ... ... இயல்பு ஆகும்’ நன். 235 ‘ஆய்தம் ஆகும் அல்வழி யான’ மு.வீ.பு. 204 ‘மெல்லெழுத்து இயையின் மெல்லெழுத்து ஆகும்’ 205 ‘இடையும் உயிரும் வரின் இயல்பு ஆகும்’ 206 ‘தெவ்’ முன் முக்கணம் 145 தெவ்என் மொழியே தொழிற்பெயர் அற்றே ம-வரின் வஃகான் மவ்வும் ஆகும். இது வகர ஈற்று உரிச்சொல் ஒன்று இருவழியும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.:) தெவ் என்னும் சொல் ஈற்று வகரம் தொழிற்பெயரின் இயல்பிற்றாய் வன்கணமும் மென்கணமும் இடைக்கணத்து வகரமும்வர, இருவழியும் உகரம்பெற்று முடியும், மென்கணத்து மகரம்வரின், ஈற்றுவகரம் மகரமுமாம் என்றவாறு. வரலாறு: தெவ்வுக்கடிது-சிறிது-தீது-பெரிது- ஞான்றது-நீண்டது-மாண்டது-வலிது எனவும், |