621 ‘எகின் உருபுபுணர்ச்சியில் அத்தும் இன்னும் பெறுதல் 193 நச். ‘ஏழ் உருபுபுணர்ச்சியில் அன்சாரியை பெறுதல்’ 194 ‘பொருட்புணர்ச்சிக்கண் அன்சாரியை பெறுதல்’ 388 ‘கரியதன்கோடு குற்றுகரஈறு அன்சாரியை பெறுதல்’ உருபிற்குச்சென்ற சாரியை பொருட்குச் சேறலைப் பலவகை மிகைகளால் கொண்ட நச்சினார்க்கினியர் அங்ஙனமும் காட்ட இயலாதனவற்றை 202ஆம் நூற்பாவின் ‘உரு பொடு சிவணி’ என்ற மிகையால் கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். ஒத்த நூற்பாக்கள்: ‘புள்ளி இறுயும் உயிர்இறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் தேருங் காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையும் கடப்பாடு இலவே’ தொல். 202 முழுதும் நன். 238 புணரியல்களுக்குப் புறனடை 147 இடைவரி வடசொலின் இயம்பிய கொளாதவும் போலியும் மரூஉம் பொருந்திய ஆற்றிற்கு இயையப் புணர்ப்பது யாவருக்கும் நெறியே. இது, புணரியல் ஒத்துக்களுள் கூறிய முடிபு எய்தாதனவற்றிற்கும் முடிபு கூறாதனவற்றிற்கும் ஒருவாற்றான் முடிபு கூறுகின்றது. (இ-ள்:) இடைச்சொல்லினும் உரிச்சொல்லினும் வடசொல்லினும் மேலைப்புணரியல் ஓத்துக்களுள் கூறிய முடிபு பெறாதனவும் போலிமொழிகளும் மரூஉ மொழிகளும் இரு |