பக்கம் எண் :

622

வகை வழக்கினும் நடக்கும் முறைமை அறிந்து அதற்குப் பொருந்துமாறு புணர்த்தல் கற்றுவல்லோர் எல்லோர்க்கும் முறைமையாம் என்றவாறு.

வரலாறு:- மடவ மன்ற தடவுநிலைக்கொன்றை (குறுந். 66-1) எனநிலைமொழி ஈற்று இடைச்சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாயும்,

ஆன்கன்னு மான்கன்னு ஊன்குறை. வண்டின்கால் தேரின்செலவு யாழின்கோடு என னகரஈற்று இடைச்சொற்கள் திரியாது இயல்பாயும்,

கமஞ்சூல் தடஞ்செவி தடந்தோள் என அகரஈற்று உரிச்சொல் மெல்லெழுத்து மிக்கும்,

மழகளிறு உறுகால் என இயல்பாயும்,

அளிகுலம் வயிரகடகம் தனதடம் என வடசொற்கள் இயல்பாயும் முடிந்தன.

இல்முன்-முன்றில், படைமுன்-முன்படை, கண்மீ- மீகண், பொதுவில்-பொதியில், வேட்கைநீர்-வேணீர் வேட்கை அவா-வேணவா என்றாற்போலும் போலிமொழிகளும் அருமருந்தன்னான் -அருமருத்தான், கிழங்கன்ன பழஞ்சோறு-கிழங்கம்பழஞ்சோறு, குணக்குள்ளது-குணாது தெற்குள்ளது-தெனாது, குடககுள்ளது-குடாது, வடக்கு உள்ளது-வடாது, சோழன்நாடு-சோணாடு, பாண்டியன் நாடு, பாண்டிநாடு மலையமான் நாடு - மலாடு, தஞ்சாவூர்- தஞ்சை, பனையூர்-பனசை, சேந்தமங்கலம்-சேந்தை ஆற்றூர்-ஆறை கப்பி, தந்தை-கப்பிந்தை, சென்னி தந்தை, சாத்தன் தந்தை-சாத்தந்தை, ஆதன்தந்தை- ஆந்தை, பூதன்தந்தை-பூந்தை, அவர்யாவர்- அவர் யார் அதுயாது-அதுயாவது என்றால்போலும் மரூஉமொழிகளும்,