பக்கம் எண் :

623

கண் விண்ண விணைத்தது-விண்விணைத்தது
ஆடை வெள்ள விளர்த்தது-வெள்விளர்த்தது
கடல் ஒல்ல ஒலித்தது-ஒல்ஒலித்தது என முறையே

‘உயிரும் புள்ளியும் இறுதிஆகி
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி
நெறிப்பட வாராக் குறைச்சொல் கிளவியும்’           தொல். 482

கரும்பார்ப்பான்-கரும்பார்ப்பினி-சரும்பார்ப்பார்
கருங்குதிரை-கருங்குதிரைகள்-என
‘உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்
ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும்’           தொல். 482

அடுகனிறு-கொல்யானை-எனச்
‘செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய்ஒருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்’           தொல். 482

அவ்வனைத்தும்-அன்றி அனைத்தும் எனவும்,
இவ்வனந்தல்-இந்த அனந்தல் எனவும்,

இன்னோரன்ன பிறவும் ஆனமரூஉ மொழிகளும் தமக்கு ஏற்ற பெற்றி முடிந்தன. பிறவும் இவ்வாறே மேலைப் புணரியல் ஒத்துக்களில் கூறிய முடிபு எய்தாதனவற்றிற்கும் முடிபு கூறாதனவற்றிற்கும் இயைந்தவாறு இதுவே ஓத்தாக முடித்துக்கொள்க.

காரா, போரா, பாசிழை, பாசடை, பைங்கண், பைந்தார் சேதா என்றால்போலும் பண்புத்தொகை முடிபு வேறுபாடுகளும் மேற்கூறியனபோல உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தமக்கு இலக்கணமாக உடையனவேயாம் என்று உணர்க.

நான்காவது-மெய்யீற்றுப் புணரியல்
முற்றிற்று