பக்கம் எண் :

624

மன்ற தடவு-இடைச்சொல் வன்கணம் வர இயல்பாயிற்று,

ஆன்-மான்-ஊன்-னகரச்சாரியை
வண்டின் கால் முதலியவற்றில் இன்சாரியை
தட, கம என்பன உரிச்சொல்

அளிகுலம் முதலியவற்றில் நிலைமொழி வருமொழி என்ற இரண்டும் வடசொற்கள்.

‘முன்என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல்என் கிளவிமிசை றகரம் ஒற்றல்
தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே’           தொல். 355

‘மீஎன மரீஇய இடம்வரை கிளவியும்’      250

‘செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐஎன் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவா
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்.’      288

இவை முன்றில், மேல் ‘மீ’ என மருவுதல், வேணவா என்பனவற்றிற்கு முறையே விதியாகும்.

‘வேணீர் உண்ட குடையோ ரன்னர்.’           பாலைக்கலி 22-9

வேணவா-வேட்கை+அவா. ‘வேட்கை-ஒரு பொருளின்மேல் தோன்றும் பற்றுள்ளம்; அவா-அதனை மேல் மேல் பெறல்வேண்டும் என்ற ஆசை. வேணவா வேட்கையால் உண்டாகிய அவா என விரியும்’ (தொல். 288 நச்.)

இங்குக் காட்டிய எடுத்துக்காட்டுக்கள் பெரும்பாலும் நன்னூல் 238ஆம் நூற்பாவில் மயிலைநாதர் காட்டியனவே