பக்கம் எண் :

625

சாத்தன்+தந்தை-சாத்தந்தை

‘இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்
மெய்ஒழித்து அன்கெடும் அவ்வியற் பெயரே.’           தொல். 347

என்பது விதி.

ஆதன்+தந்தை-ஆந்தை;

‘ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயர்ஒற்று அகரம் துவரக் கெடுமே.’           தொல். 348

என்பது விதி,

யாவர்-யார்; யாது-யாவது;

‘பலர் அறி சொல்முன் யாவர் என்னும்
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை
ஒன்றுஅறி சொல்முன் யாதுஎன் வினாவிடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியில் திரியுமன் பயின்றே’           தொல், 172

என்பது விதி.

விண்-வெள்-ஒல் என்பன உரிச்சொல்; இவை விண்ண வெள்ள-ஒல்ல என உயிரீறாயும், விண்-வெள்-ஒல் எனப் புள்ளியீறாயும் நின்றலின், ஒன்றன்கண் அடக்கலாகாமையின் தன்மை குறைந்து ‘நெறிப்பட வாராக் குறைச்சொல் கிளவி’ ஆயின.

ஏனைப் பண்புத் தொகையும் வினைத்தொகையும் பிரித்துப் புணர்க்கும்வழித் தொகைப்பொருள் சிதைதலின் இவற்றைப் பிரித்துப் புணர்க்காது நின்றாங்கே கொள்க என்பது.