பக்கம் எண் :

626

அவ்வனைத்தும் என்பது ‘அன்றி அனைத்தும்’ (தொல். 210) எனவும், இவ்வனந்தல் என்பது இந்த அனந்தல் எனவும் மருவி வருவனவற்றையும் ஈண்டுக் கொண்டார்.

பண்புத்தொகை முடிபு வேறுபாடும் மருவிவந்த வழக்கையே அடியொற்றியது என்பதை இறுதிப்பத்தியில் விளக்குகிறார்.

ஒத்த நூற்பாக்கள்:

‘உணரக்கூறிய புணரியல் மருங்கின்
கண்டுசெயற்கு உரியவை கண்ணினர் கொளலே.’           தொல். 405

முழுதும்           நன். 239

‘பண்ணிய சந்திபகரா தனவும் பகர்ந்தவற்றால்
கண்ணி உரைக்க மதியால்’           வீ. 28

‘.... .... ... சந்திகளின்
அல்லாதனவும் அடக்கும்வாய் கண்டு அடக்க
எல்லாம் முடியும் இனிது’           நே. 24

நான்காவது-மெய்யீற்றுப் புணரியல் முற்றிற்று.