இவர் கருத்துச்சேனாவரையருடையது. தொல்.சொல்.62 அவருள், தானே கொண்டாள்’ என்ற வழித் தான் எனப் பட்டான் பிறரில் பிரிக்கப்பட்ட வழிப் பிறரும் அவனில் பிரிக்கப்பட்டனர் என்று கொள்வதுபோலவும், நிலத்திற்கு வன்மை இயல்பாகவும், நீர்நிலமும் சேற்று நிலமும் மிதித்துப் பின் வன்னிலம் மிதித்தான் நிலம் வலிதாயிற்று என்று கூறும் வழக்கம் உண்மை போலவும், ஏனைய வேற்றுமைப் பொருள்களைக் கொண்டு நோக்க எழுவாய் வேற்றுமை அவற்றில் வேறுபாடுடைத்தாதல், தன் இயல்பிற்றாகிய முகத்ததாகவே குரங்கு இருக்கவும் அதனைமனிதன் தன் முகத்தோடு ஒப்பு நோக்கி வலிமுகம் என்று கூறுவது போன்ற மரபை ஒட்டியதாம் எனச்சேனாவரையரும் இவ்வாசிரியரும் கூறியதன் அமைதியை நோக்குக. |