சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-35137

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘வேற்றுமை தாமே ஏழ்என மொழிப’.
 
தொல்.சொல்.62
  ‘விளிகொள் வதன்கண் விளியொடு எட்டே’. ”
 
63
  ‘கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப.’
‘எட்டாம் எழுவாய் முதற்பெயர் வேற்றுமை’.
வீ.சோ. 29
 
‘ஈண்டுரைப்பின் வேற்றுமை எட்டாகும்- மூண்டவைதாம்
தோற்றம் பெயர் முன்னர் ஏழும் தொடர்ந்தியலும்
ஏற்ற பொருள்செய் இடத்து’. நே.சொல்
.16
 
‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்ஈ றாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை’
நன். 291
 
‘வினைமுதல் வினையே செயப்படு பொருளே
கருவி கொள்வோன் நீக்கம் குறையே
இடமென எட்டும் வடமொழி வேற்றுமை
ஏழா றென்றும் இயம்பும் தமிழ்நூல்’.
இ.கொ. 13
 
‘உருபு வேறுருபு சொல்லுருபு என்ன
வேற்றுமை உருபு மூன்றென விளம்புவர்’.
16
 
‘அவைதாம்,
‘உரிமையாய் நிற்றல் ஒப்பாய் நிற்றல்
மாறுபட நிற்றல் எனவழங் குவரே.’
17
 
‘உறுபுவேறு உருபு சொல்லுருபு ஆகியும்
உருபினை ஏலாப் பெயரே ஆகியும்
உருபினை ஏற்ற பெயரே ஆகியும்
உருபு தொக்க பெயரே ஆகியும்
இரண்டுருபு இணைந்தால் ஒன்று உருபு ஆகியும்
மாறி நின்றும் வரும்இட உருபே.’
இ.கொ.18