| | ‘வேற்றுமை உருபுகள் அல்லா தனவும் வேற்றுமை உருபுகள் போல்வெளிப் படுமே.’ | 19 |
| | ‘உருபுஏற் றதனையும் உருபையும் உருபு நோக்கிவந் ததனையும் வேற்றுமை என்பர்.’ | 20 |
| | ‘உருபினை ஏற்றசொல் பலபொருள் படுதலும் உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலும் எனஇரு கூறாம் வேற்றுமை என்பர்.”’ | 21 |
| | ‘பகுபதம் பகாப்பதம் இருவகைத் தொடர்ப்பதம் வினைமுற் றுப்பெயர் குறிப்புமுற் றுப்பெயர் தொழிற்பெயர் ஆதியின் தோன்றும்எட் டுருபே.”’ | .24 |
| | ‘வேற்றுமைப் படுத்தலின் வேற்றுமை ஆம்இவை பெயர்ஐ ஆல்குஇன் அதுகண் விளிஎட்டே’. | தொ.வி. 55 |
| | ‘எல்லாப் பெயரும் வேற்றமை ஏற்கும்.’ | மு.வீ.பெ.48 |
| | வேற்றுமை தானே விளியோடு எட்டே. ” | 49 |
அவற்றின் பெயரும் முறையும்
|
| 194 | பெயரே ஐஆல் குஇன் அதுகண் விளிஎன்று ஆகும் அவற்றின் பெயர்முறை. | |
இஃது அவற்றின் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. இ-ள்: பெயரும் ஐயும் ஆலும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் விளியும் என்று கூறப்படும், அவற்றின் பெயரும் அவற்றின் கிடக்கை முறையும் என்றவாறு. ஈண்டுக் கூறிய பெயர்களே அன்றி, எழுவாய்- இரண்டாவது- மூன்றாவது- நான்காவது- ஐந்தாவது- ஆறாவது- ஏழாவது- எட்டாவது என இவை வேறு வேறுபெயர் கொள்ளுமாறு மேலே கூறுப |