சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-36139

சாத்தன் குடத்தைக் கையால் வளைந்து கொற்றற்குக் கொடுத்தான் என
வேண்டுதலின், இங்ஙனம் கிடத்தல் கிடக்கைமுறை ஆயிற்று என்பது. பிறவும் அன்ன.
 

விளக்கம்
 

எழுவாய் செயப்படுபொருளைக் கருவிகொண்டு இன்னதன் பொருட்டுச் செய்தது
என்ற முறைபற்றி முதல்நான்கு வேற்றுமைகளின் கிடக்கை முறையும் கூறப்பட்டது.

இவ்வேற்றுமைகளில் ஆறாவதும் விளியும் நீங்கலான ஏனையவை வினைகொண்டு
முடியும் எனவும் அவை காரகம் எனவும் கூறப்படும்.

 
‘விளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள்
வினையான் முடியின் காரகம் எனப்பெறும்
குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்.’
 
இ.கொ. 14
என்பதனையும், அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்ட
 
‘நாரா யணன்பூ ஓரா யிரத்தைச்
கரத்தால் கொய்துஅரற்கே கொடுத்துச்
சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்
பாற்கடல் கண்ணே பள்ளிகொண் டானெனக்
காரகம் முழுதும் வந்தன காண்க
இவற்றினுள் ஒன்றே இயம்பினும் காரகம்’
 
இ.கொ.15
என்ற நூற்பாவையும் நோக்குக.
                    வேற்றுமை உருபு பற்றியும் காரகம் பற்றியும் பிரயோக விவேக நூலார் கூறிய
ஐஇரண்டு ஆன்ஒடு மூன்றுகுவ் வொடு பொருட்டு ஏறிய நான்கு மற்று ஏழொடு கூடி
இயைந்த நின்றோடு ஆறிய இன்ஐந்து அதுகு உடையஅ ஆறுஇல்கண்ஏழ்