| தேறிய சத்தம் இவற்றுள்ளும் அத்தம் சிலவுளவே’. | (6) |
| ‘தேற்றும் தமிழுக்கு எழுவாய் விபத்தி திரிபில்பெயர்’ தோற்றும் பிறஉருபு ஓர்ஆறும் வேற்றுமை தோன்றி நிற்கும் | |
| ஆற்றும் கருத்தா கருமம் கரணம் அவதி கொள்வோன் சாற்றும் தொழிற்குஇடம் என்றுஅறு காரகம் தாம் உளவே’ | (7) |
| ‘பாழியா வினைசெய் பவன் சுருத் தா; செயப்பட்ட பொருள் அழியாது நிற்கும் கருமம்; கருவி அருங்கரணம்; ஒழியாது கொள்பவன் சம்பிர தானம்; மொழிஅவதி இழிபாம்; அதிகரணந்தான் இடம் என்பர் ஏந்திழையே’ | (8) |
| இந்திரன் தாமரை யைக்கரத் தால்கொய்து இறைவனுக்குத் தந்துஇருங் குற்றத்தின் நீங்கிவிண் மேல்இருந்தான் எனலும் வந்துஅருங் காரகம் எல்லாம் பிறக்கும்ஓர் வாக்கியத்துள் சிந்துர வாள்நுதல் செவ்வாய்க் குறுநகைத் தேமொழியே | (9) |
என்று கூறியனவற்றையும் நோக்குக.
வீரசோழிய நூலாரும் வேற்றுமையும் காரகமும் பற்றி |
| ‘எட்டாம் எழுவாய் முதற்பெயர் வேற்றுமை; ஆறுளவாம் கட்டார் கருத்தா முதற்கா ரகம்; அவை கட்டுரைப்பின் ஒட்டார் கருத்தா கருமம் கரணம்ஒண் கோளியொடும் சிட்டார் அவதியொடு ஆதாரம் என்றறி தேமொழியே’. | வீ.சோ.29 |
என்று கூறியதும் நோக்குக. இவ்வேற்றுமை உருபுகள் பற்றி, இலக்கணக்கொத்து, |