| ‘ஒருவேற் றுமைக்குள்ஓர் உருபே வருதலும் ஒருவேற் றுமைக்குப் பலஉருபு வருதலும் எனஇரு கூறாய் வரும்உரு புகளே ஐகு ஒன்றே அல்லன பலவே’ | இ.கொ. 22 |
| ‘ஓர்உரு பிற்கே பல பொருள் வருதலும் ஒருபொருட் கேபல உருபுகள் வருதலும் எனஇரண் டாகும் வேற்றுமை இயல்பே அவ்விரண்டனையும் முறையே அறைகுவன்.’ | இ.கொ 23் |
என்று கூறியனவற்றையும் உட்கொள்க. |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘அவைதாம் பெயர் ஐ ஒடுகு இன்அது கண்விளி என்னும் ஈற்ற.’ | தொல்.சொல். 64 |
| ‘காண்டகு பேர் ஐஒடுகு இன்அது கண்விளி என்று ஈண்டுரைப்பின் வேற்றுமை எட்டாகும்’ | நே.சொல். 16 |
| முழுதும் - | நன்னூல். 292 |
| ‘இவை, பெயர் ஐ ஆல்குஇன் அதுகண் விளிஎட்டே.’ | தொ.வி. 55 |
| ‘பெயர்ஐ ஒடுகு இன்அது கண்விளி.’ | மு.வீ.பெ- 60 |
| | |
| ஆறாவது பிற உருபுகளை ஏற்குமாறு | |
195 | ஆறன் உருபும் ஏற்கும்அவ் வுருபே. | |
இஃது எய்தாதது எய்துவிக்கின்றது. இ-ள்: பெயரே அன்றி ஆறன் உருபும் அவ்வுருபுகளை ஏற்கும் என்றவாறு. வரலாறு: சாத்தனதனை- சாத்தனதனால்- சாத்தனதற்கு- சாத்தனதனின்- சாத்தனதனது- சாத்தனதன்கண் எனவரும். ஏற்புழிக் கோடலான் எழுவாயும் விளியும் ஒழித்து ஏனையவே கொள்க. |