செறும், நட்டாரை உவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயை எண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், கணையை நோக்கும், கள்வரை அஞ்சும் எனவரும் காப்பு முதலிய இப்பத்தொன்பதும் எய்தப்படுவன. இவை தாம் தொழில் உறுவனவும் தொழிற்பயன் உறுவனவும் ஆகி வரும் வேறுபாடும் உணர்க. வெருளலும் செறலும் கொலைப் பொருள் ஆயவழி வேறுபடுக்கப்படுவனவாம். செறல் வெகுளியது காரியம். உவத்தல் காதலது காரியம்.இனிச் சோற்றைக் குழைத்தான் எனச் செய்வான் கருத்து இல்வழி நிகழும் செயப்படு பொருளும், சாத்தன் தன்னைக் குத்தினான் எனச் செய்வானும் செயப்படு பொருளும் தானேயாய் நிற்பதும் கொள்க. ‘பிற’ என்றதனானே பகைவரைப்பணித்தான். சோற்றை அட்டான், குழையை உடையன், பொருளை இலன், என்றாற் போல்வனவும் கொள்க. எயிலை இழைத்தான் என்றவழி எயில் என்பது இழைத்தல் தொழிலை உற்று நின்றாற்போல, குழையை உடையன் என்றவழிக் குழை என்பது ஒரு தொழில் உற்று நில்லாமையின் செயப்படு பொருள் ஆமாறு என்னை எனின், அதுவும் உடையன் எனக் கருதுதல் தொழிலை உற்று நின்றமையின் செயப்படு பொருளேயாம் என்பது, காப்பு முதலாயின பொருள் பற்றி நின்றமையான். ஊரைப்புரக்கும்- தேரைச் செலுத்தும் என்பனபோல்வன எல்லாம் கொள்க. |