சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

154 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள்: இரண்டாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு ஐ
என்பதாம்; அதன் பொருள் முன் இல்லதனை உண்டாக்கவும் முன் உள்ளதனை
வேறுபடுக்கவும் இவ்விருவகையும் இன்றி எய்தவும் படூஉம் பகுதியனவும், அவ்வாற்றான்
அன்றிப் பிறவாற்றான் வரும் பகுதியனவும் ஆகிய செயப்படுபொருளாம் என்றவாறு.

செயப்படு பொருளாவது ஒரு வினைமுதல் செய்யும் தொழிலினை உறுவது.
இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதும் எனச் செயப்படு பொருளை
மூன்றாகத் தொகுத்தாரேனும், வகுத்துக்கூறும் இடத்து இயற்றப் படுவது ஒருதன்மைத்து
ஆதலின் அஃது ஒன்றும், வேறு படுக்கப்படுவது எட்டும், எய்தப்படுவது தொழில்
உறுவதும் தொழில் பயன் உறுவதும் ஆகப் பத்தொன்பதும் ஆக இருபத்தெட்டு
வகையாம் என்பது உரையிற் கொள்க.

வரலாறு: எயிலை இழைத்தான்- இஃது இயற்றப்படுவது; குடத்தை வனைந்தான்
என்பதும் அது.

கிளியை ஓப்பம், பொருளை இழக்கும், நாணை அறுக்கும்; மரத்தைக் குறைக்கும்,
நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், அறத்தை ஆக்கும், நாட்டைச் சிதைக்கும்
எனவரும் ஓப்பு முதலிய இவ்வெட்டும் வேறுபடுத்தப்படுவன. இவற்றிற்கு வேறுபாடு
முறையே ஒருதொழில் உறுவிக்கப்பட்டுத் தானே போதலும், தொழில்பயன்
உற்றமாத்திரையாய் ஒருவன் கொண்டுபோகப்போதலும், சிறிது இழவாமல்
வேறுபடுத்தலும், சிறிது இழக்க வேறுபடுத்தலும், விரித்தது தொகுத்தலும், தொகுத்தது
விரித்தலும், மிகுத்தலும், கெடுதலும் ஆம். குறைத்தற்குப் பெருமையைச் சுருக்குதலும்
ஆம்.

ஊரைக்காக்கும், தந்தையை ஒக்கும், தேரை ஊரும் குரிசிலைப் புகழும், நாட்டைப்
பழிக்கும், புதல்வனைப்பெறும் மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும்,
செற்றாறாரைச.