சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

168 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கருத்தா’ எனவும் ‘சாதகதமங்கரணம்’ எனவும் ஓதினார். ஒரு தொழில் நிகழ்ச்சிக்கண் தன்வயத்ததாகக் குறிக்கப்படும் பொருள் கருத்தா எனவும் ஒரு தொழில் பயத்தற்கண் உயர்ந்த காரகங் கருவி எனவும் அவற்றிற்கு நிருத்தி கூறுவார். இங்ஙனம் கூறியவாற்றான் கருவி கருத்தா முதலிய ஆதல்தன்மை பொருந்துமாறு அறிக. ஏனையவும் இவ்வாறு உள்ளன ஓர்ந்து உணர்க.
 

அமைதி
 

‘வினைமுதலாவது கருவி முதலாயின காரணங்களைத் தொழில் படுத்துவது.
கருவியாவது வினைமுதல் தொழில் பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது’ என்பது
சேனாவரையர் கூறிய விளக்கம். வடநூல் கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர்
உரைத்ததே இவ்வாசிரியரும் உரைத்தார். வினைக்கண் செயப்படு பொருள் யாண்டும்
அகநிலையாக உள்ளமை உண்டான் என்பதனை உண்ணுதலைச் செய்தான் எனவும்,
நடந்தான் என்பதனை நடத்தலைச் செய்தான் எனவும் கருதிக்கொள்ளுதலான் உளதாதல்
எல்லா ஆசிரியருக்கும் உடன்பாடு. இது ‘வினையே செய்வது’ (தொல்.சொல்.112 நச்.)
என்ற நூற்பாவான் விளங்கும். அகநிலைச் செயப்படு பொருட்கு வருதலைச் செய்தான்
என முனிவரும் எடுத்துக்காட்டுத் தந்துள்ளமையும் (நன்.296 விருத்தி) காண்க. எனவே
இம்மறுப்பு, தம்கொள்கையை மறந்து உரைப்பதால் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘மூன்றாகுவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற்று அதுவே.’
 
தொல்.சொல்.73
  ‘அதனின்..................என்மனார்.’
‘மூன்றுஓடு ஒடுஆலாம் பகர் கருத்தர
வையம் நிகழ்கரணத் தின்வரும்.’
வீ.சோ.34