இது நான்காம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது. இ-ள்: நான்காம் எண்ணுமுறைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு கு என்பதாம் அதன் பொருள்: அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான்- ‘இரப்போர்க்குத் தேர் ஈயும் வண்கையவன்’- என்பன போல ஒன்றற்கு ஒன்றைக் கொடுத்தலும், அவற்குப் பகை இவன்- அவற்கு மாற்றான் இவன்- மக்கட்குப் பகை வெகுளி- என்பனபோல ஒன்றற்கு ஒன்று பகை ஆதலும், நாகர்க்குப் பலி நேர்ந்தார்- சாத்தற்கு மகள் உடம்பட்டார்- என்பனபோல ஒன்றற்கு ஒன்றை மேல் கொடுப்பதாக உடம்படுதலும், அவற்குத் தக்காள் இவள்- அறத்திற்குத் தக்கது அருள்- என்பனபோல ஒன்றற்கு ஒன்று தகுதலும், |