சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

170 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

கடி சூத்திரத்துக்குப் பொன்- அவலுக்கு நெல் என்பனபோல உருபு ஏற்கும் பொருள் தானேயாய்த் திரிதல்.

கூழிற்குக் குற்றேவல் செய்யும்-கூலிக்குக்கூறை ஒலிக்கும்- என்பனபோல ஒன்றனை
மேற்பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்த்தலும்,

சாத்தற்கு மகன்-கொற்றிக்கு மகள்- என்பன போல் ஒன்றற்கு ஒன்று முறை
ஆதலும்,

முதலிய பொருண்மைக்கண் இதற்கு இது என்பது பட நிற்றலாம் என்றவாறு.

‘ஆதி’ என்றதனானே, மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் என்பது போலக்
கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண்ணேயே செல்லாது ஆண்டுத் தோன்றுதலும்,
மாணாக்கர்க்கு நூற்பொருள் உரைத்தான் என்பது போலக் கொடைப் பொருள் குறித்த
சொல்லான் அன்றிப் பிற வாய்பாட்டான் கூறுதலும்-ஆகிய கொடைப்
பொருண்மைக்கண்ணும்,
 

  ‘அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்’
 
சிலப். 20 வெண்பா
  ‘பிணிக்கு மருந்து’
 
குறள்.1102

 
‘கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை’ குறள். 290

என்பனபோலப் பகைமை தோன்ற நிற்கும் பொருண்மைக்கண்ணும்,
 

  ‘உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர்’ இறை கள. உரை. 5.மேற்.

 
‘அருங்கலம் உலகின் மிக்க அரசர்க்கே உரிய’
‘செல்வர்க்கே செல்வந் தகைத்து’
சூளா. கல்.189
குறள்.125